Type to search

ஜனாதிபதி என்ன செய்தார்? மலேசியப் பிரதமர் போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

NEWS

ஜனாதிபதி என்ன செய்தார்? மலேசியப் பிரதமர் போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

Share
  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    196
    Shares

(Duminda Dissanayake comments president maithripala sirisena)

ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மலேசியப் பிரதமர் போன்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மலேசிய மக்கள், முன்னாள் அரசாங்கத்தில் ஊழல் செய்த அரசியல்வாதிகளை தண்டிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் பதவியேற்றவுடன் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அதிரடியாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள் எனக் கருதப்பட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள புலனாய்வாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்துவதற்கு தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறு தவறுகள் புரியும் ஏழை பொதுமக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க தயங்குவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செல்வாக்குள்ள சிலர் தங்களை கைதுசெய்வதை தவிர்க்க முன் பிணை பெறுவதாகவும் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியா பிரதமர் பதவியேற்று 5 நாட்களுக்குள் எடுத்த நடவடிக்கைகள், 9 அமைச்சர்கள் கைது, 144 வர்த்தகர்கள், குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு வான் வழியையும் கடல் வழியையும் முடியமை, ஊழல் காரணமாக 50 நீதிபதிகளையும் 200 பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்தல் மற்றும் ஜூன் மாதம் முதல் வரி குறைப்புகள் அறிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன செய்தார் என்று மக்கள் கேள்வியெழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Duminda Dissanayake comments president maithripala sirisena


  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    196
    Shares
Tags:

You Might also Like