Type to search

இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய தலைமையை அறிமுகம் செய்யுங்கள்

NEWS Uncategorized

இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய தலைமையை அறிமுகம் செய்யுங்கள்

Share
  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    72
    Shares

கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியினர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த சந்திப்பு இன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த குறித்த கட்சியின் தலைவர் குறிப்பிடுகையில், former ltte member request sent home sampanthan latest news

பிரதமர் கிளிநொச்சி வருகை தந்தபோது சிறார்கள் கல்வி கற்றல் தொடர்பில கருத்து தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாண முதல்வர் தலைமையில் புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பிலும் விமர்சனம் முன்வைத்தார். புதிய கட்சி வேண்டாம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தவறுதலாக வழிநடாத்தும் சம்பந்தன் தலைமையை மாற்றி புதிய தலைமையை மக்கள் முன்பாக ஏற்க வேண்டும் .எமக்கு புதிய கட்சிகள் தேவையில்லை என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

இதேவேளை கிழக்கில் மு.பா. ம உறுப்பினர் அரியநேந்திரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை முன்னேற விடுவதற்கு பெரும் எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயாவுக்கு 100 ஏக்கருக்கு மேல் காணி உள்ளது. இவ்வாறு அனைவரும் தாம் சொத்துக்களை சேர்க்கவே செயற்படுகின்றனர். ஆரம்பத்தில் 3 வருடம் இருப்போம், 2 வருடம் இருப்போம் என தெரிவிக்கும் அவர்கள் பின்னர் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்றவுடன் தொடர்ந்தும் அரசியலில் இருக்க விரும்புகின்றனர்.

சம்பந்தன் ஐயாவுக்கு காளி கோவில் மாத்திரம்தான் தெரியும் அவர் அங்கு மட்டும்தான் செல்வார். மக்கள் பிரச்சினை தொடர்பில் அவருக்கு என்ன தெரியும். என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும்போது மௌனமாக இருந்த சம்பந்தன் ஐயா, தொடர்ந்து எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரும்போது உலகில் எங்கும் நடக்காத ஒன்றை செய்ய புரிகின்றீர்கள் என ஆதங்கம் வெளியிட்டமை தொடர்பிலும் கருத்து முன்வைக்கப்பட்டது.
former ltte member request sent home sampanthan latest news

More Tamil News

Tamil News Group websites :

 


  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    72
    Shares
Tags: