Type to search

எட்டுமாதக் குழந்தை கடத்தல் : மற்றுமொருவர் கைது

NEWS Trending News

எட்டுமாதக் குழந்தை கடத்தல் : மற்றுமொருவர் கைது

Share
  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    35
    Shares

வவுனியாவில் எட்டுமாதக் குழந்தை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (8 month old infant abducted Vavuniya 3rd arrested)

அண்மையில் வவுனியா குட்சைட் வீதியிலுள்ள 8மாதமான ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிஸார் இன்று மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நந்தகோபால் கோபால் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை 2மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் 8 மாதமுடைய ஆண் குழந்தை கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் பதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து இன்று மேலும் ஒரு நபரைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இன்றைய தினம் நிதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தன்னை பழிவாங்கும் நோக்கில் தனது கணவனால் திட்டமிட்டு இந்த குழந்தை கடத்தப்பட்டதாக மனைவி தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags: