Type to search

தொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு

Local Gossip NEWS

தொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(tamilnews one week phone lover robbed womans money)

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை மோசடியாக கொள்ளையடித்த காதலன் தலைமறைவாகியுள்ளார்.

கையடக்க தொலைபேசி மூலமாக கடந்த ஒரு வாரமாக காதல் வார்த்தைகளை பகிர்ந்து வந்த கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு – பேலியகொட, கெமுனு மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண், ஆண் ஒருவரை தொலைபேசி மூலம் ஒருவார காலமாக காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் கொழும்பிலிருந்து திருகோணமலையை சுற்றிப்பார்க்க சொகுசு காரில் சென்றுள்ளனர்.

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல விருந்தகம் ஒன்றில் இரவு வேளையில் இரண்டு பேரும் மது அருந்தி விட்டு உறங்கியுள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை பார்த்த போது காதலரை காணவில்லை எனவும், தன்னிடம் இருந்த 16 இலட்சம் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் அழைத்து வந்தவரின் கையடக்க தொலைபேசி மாத்திரமே இருந்ததாகவும் அவர் பற்றிய விபரங்கள் அதில் இல்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உப்புவெளி பொலிஸார் அந்த முறைப்பாட்டை அடுத்து விருந்தகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கையடக்கத் தொலைபேசி மூலமாகவோ அல்லது வட்ஸ்எப், வைபர் போன்ற சமூக செயலிகள் மற்றும் இணையங்களின் மூலம் காதலிக்கும் பெண்கள், ஆண்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பாக கவனமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(tamilnews one week phone lover robbed womans money)

More Tamil News

Tamil News Group websites :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: