Type to search

சுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்

NEWS

சுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

சுங்கவரி திணைக்களத்தில் இடம்பெற்ற 16 பில்லியன் ரூபா மோசடி தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுங்கவரி திணைக்கள இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார். (16 billion rupees fraud Customs Department)

இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் சுங்கத் திணைக்களத்தை ஏற்கும் முன்னர் நிர்வகித்த அதிகாரிகளால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

இவருக்கு முன்னர் சுங்கவரி திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரலாக கடமையாற்றிய சூலானந்த பெரேரா, ஒன்றுக்கு ஒரு இலட்ச ரூபா அபராதமாக விதிக்கப்பட்டு ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1675 அதி சொகுசு பீ.எம். டப்லிவ் வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேன்முறையீட்டு மன்றத்திற்கு இயக்குநர் ஜெனரல் சரோஜனி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இவரால் நீதிமன்றத்திற்கு தெரிவித்த தகவல்களின் படி, சூலானந்த பெரேர குறித்த அபராதத்தை அறவிட்டமை 2017 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரச அதிபராக கடைமையாற்றிய சரோஜனி சார்ள்ஸ் சுங்கவரி திணைக்களத்தில் இயக்குநர் ஜெனரலாக பதவியேற்றது 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதியாகும்.

2017 ஆம் ஆண்டு சூலானந்த பெரேரா ஸ்ரீலங்கா நிர்வாக சேவை குழாமுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கறிஞர் நாகானந்த கொடித்துவக்கு இது தொடர்ப்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 16 billion rupees fraud Customs Department


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: