பச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்
Share

தமது சுயநலத்திற்காக கோடீஸ்வர நண்பனை, நண்பர்களே கொலை செய்த சம்பவமொன்று சீதுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (misery millionaire friend)
நண்பர்கள் ஒரு சிலர், தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான பணத்தை தேடுவதற்காகவும் தங்களின் கோடீஸ்வர நண்பனின் விலை உயர்ந்த வாகனத்தை கைப்பற்றும் நோக்கத்துடனும் அவரை கிரிக்கெட் மட்டைகளால் தாக்கியும் பின்னர் வயர்களால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து, அவரின் உடலில் கற்களைக் கட்டி குளத்தில் மூழ்கவிட்ட கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சீதுவைப் பிரதேசத்திலுள்ள பிரபல இசைக் குழுவின் தலைவனும் அக்குழுவின் பிரதான பாடகரும் இந்த இசைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நபர்களையும் நீர்கொழும்பு பொலிஸின் குற்ற புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கோடீஸ்வர நபர் ஒரு மாணிக்கக்கற்கள் மற்றும் அலங்கார மீன்களை விற்பனை செய்யும் வியாபாரி என்றும் தெரியவந்துள்ளது.
தனிமையில் வாழ்ந்துவந்த இந்த கோடீஸ்வர வர்த்தகர் சீதுவை பிரதேசத்திலுள்ள இந்த இசைக்குழுவின் தலைவன் மற்றும் பிரதான பாடகர், இசைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரினதும் விசேட நண்பராவார்.
இந்த கொலை கடந்த மே மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரரின் தேசிய அடையாள அட்டை அவரின் காசோலை புத்தகம் மற்றும் இவரின் பல விலையுள்ள உடமைகள், வாகனம் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளதோடு, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.
More Tamil News
- கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு கோரி, யாழ். நீரியல் வளத் திணைக்களம் முற்றுகை
- மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை
- யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; தமிழ் மண்ணில் 33 பொறியியலாளர்கள்
- வடமராட்சியில் கூட்டமைப்பினருக்கும் முன்னணியினருக்கும் இடையே கொந்தளிப்பு
- கண்டிக்கு பயணித்த பஸ்ஸில் ஆபாசத் திரைப்படம்; அதிர்ச்சிக்குள்ளான பயணிகள்
- கணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி
- சுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்
- எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; misery millionaire friend