Type to search

கிம்-ட்ரம்ப் – அவுஸ்திரேலியா வரவேற்பு!

Australia Australia Head Line Australia Top Story WORLD

கிம்-ட்ரம்ப் – அவுஸ்திரேலியா வரவேற்பு!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு கிடையில் இன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பினை அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தை முற்றிலும் அணுஆயுதங்களில் இருந்து விடுவிப்பது என்பதே சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இது தொடர்பான தொடர் பேச்சுவார்த்தையை தாம் எதிர்ப்பார்ப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முக்கிய மற்றும் உறுதியான நகர்வுகளை வடகொரியா மேற்கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மேலும் இதற்காக அவுஸ்திரேலியா தனது பங்காளி நாடுகளுடன் இணைந்து செயற்படுமென அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் சமாதானம், நிலையான தன்மை ஆகியவைக்கு ஒத்துழைப்பு வழங்குமென அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: